Saturday, December 12, 2009

Read the following article in a forward mail sent by my friend.

Thought of posting it ....


நீண்ட நாள் வாழ! -15 வழிகள்!!


நீண்ட நாள் வாழ் நிறைய வழிகள் உள்ளன. நம் வாழ்வை நாமே கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்!

என்ன செய்தால் நீண்ட நாள் வாழலாம். சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேன்!

1.நடுத்தர வயதுடைய நீங்கள் வாரம் 5 மணிநேரம் ஓடுகிறீர்களா? அப்படியானால் வயதானாலும் உங்களுக்கு உடல் வலிவுடன் இளமையும் சிந்தனைத் திறனும் இருக்கும். இதயக் கோளாறுகள், புற்றுநோய், நரம்பு வியாதிகள் வருவதும் குறைகிறது.

2.நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் உண்ணுகிறீர்களா? உங்கள் கெட்ட கொழுப்பு குறையும், உடல் எடையையும் குறைக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பும் நன்றாக இருக்கும்.

3.உங்களை நீங்கள் இளமையாக நினைத்துக் கொள்கிறீர்களா? உங்கள் எண்ணமே உங்களுக்கு சவால்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதைக் கொடுக்கும். உடலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும்!

4. குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளைத் த்ரிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருங்கள். இது உங்கள் மூளையைப் புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும்.

5.உங்கள் உணவில் கவனம் செலுத்துகிறீர்களா? 1400-2000 கலோரிக்குள் தினமும் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உங்கள் இதயம் உங்களைவிட 15 வயது இளையவர்களைப்போல் வலுவுடன் இயங்கும்.

6.மீன்களையும், கொட்டைகளையும் சாப்பிடுங்கள்! இவற்றில் ஒமேகா3 கொழுப்பு என்ற நல்ல கொழுப்பு இருப்பதால் இவை உடலுக்கு நல்லது! இவை ரத்த நாளங்கள் பழுதாவதைத் தடுக்கின்றன!

7.முழுதானிய உணவை உண்ணுங்கள்! இவற்றில் விட்டமின் ஈ, நார்ச்சத்து அதிகம்! முழு கோதுமை ரொட்டி, பஸ்தா, போன்றவை புற்றுநோயைக்கூடத்தடுக்கும்!!

8.100-200 முறை சிரித்தால் அது பத்து நிமிடம் ஜாகிங் செய்ததற்கு சமம் !! உண்மைங்க! அது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக்குறைத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

9.ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டாம்! அதே போல் நான்கு மணி நேரத்துக்குக் குறைவாகவும் தூங்கக்கூடாது! இந்த வகைத் தூக்கம் உள்ளவர்களில் இறப்பு அதிகம்!

10.நீண்ட மண வாழ்க்கை ஆயுளைக் கூட்டும். ஆண் பெண் இரு பாலருக்குக் இது பொருந்தும்.

11.தாய்தந்தையருடன் நெருக்கமாக இருக்கும் பிள்ளைகளுக்கு கொடிய நோய்கள் - இரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் வருவது குறைவாம்!

12.உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு ஏதாவது விளையாடுங்கள்! செஸ், சீட்டு, கேரம் என்று பிடித்த விளையாட்டை விளையாடுபவர்கள் உடல் நலமுடன் இருக்கிறார்களாம்!

13.பச்சைத் தேயிலைட்ட்டீ, கருப்பு டீ ஆகியவற்றில் இதயநோய் தடுக்கும். ஆகையால் தினம் ஒருமுறை சாப்பிடுங்கள்! குறிப்பாக மாரடைப்பு வந்தவர்கள் இதனை அருந்தினால் 28% அதிகம் உயிர் வாழ்கிறார்கள்!

14.ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள்! அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்!!

15.நாய், பூனை, மீன் என்று ஏதாவது வளருங்கள்! வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறதாம்!

நிறைய நாம் படித்தவைதான். மீண்டும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்வதால் அவற்றை நாம் பயன்படுத்தி நீண்ட நாள் வாழலாமே!!